Tuesday, January 18, 2011

கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

ஒவ்வொரு வருடமும் சென்னை ஐ.ஐ.டி. இல், வேறு கல்லூரிகளில் படிக்க்ம் மாணவர்கள் summer internship செய்ய ஒரு அறிவிப்பு வரும். 2011க்கு , இப்போது அதற்கான விளம்பரம் வந்துள்ளது. நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ கல்லூரியில் படித்தால் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். சுருக்கமாக,

1. எல்லா பொறியியல், அறிவியல் , Management, Humanities துறைகளிலும் இருக்கிறது.
2. அப்ளிகேசன் கொடுக்க கடைசி நாள் பிப்ரவரி 18, 2011.
3. internship ஆனது மே மாதம் 16 முதல் ஜுலை 15 வரை. இதில் கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடியும். (எ.கா. உங்கள் கல்லூரி கொஞ்சம் லேட்டாக முடிந்தால், நீங்களும் தாமதமாக வர அனுமதிப்பார்கள்)
4. மாதம் 6,500/- ரூபாய் வரை, ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
5. இது மூன்றாம் ஆண்டு படிக்கும் B.E./ B.Tech./ BSC (Engg) மாணவர்களுக்கு மற்றும் முதல் ஆண்டு படிக்கும் எம்.ஏ, எம்.எஸ்.சி. , எம்.பி.ஏ, மாணவர்களுக்கு. ஆனால், இரண்டாம் ஆண்டு படிக்கும் B.E./ B.Tech. மாணவர்களும் சும்மா application போட்டு வைக்கலாம் என்பது என் கருத்து.
6. Application fee கிடையாது.

வெறும் அப்ளிகேசன் போட்டால் ஓரளவுதான் வாய்ப்பு. உங்கள் வாய்ப்பை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை:

1. உங்கள் துறையில் ஐ.ஐ.டி. யில் யார் யார் வேலை செய்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை இணைய தளத்தில் சென்று பார்க்கவும்.
2. பெரும்பாலும் ரிடையர் ஆகப் போகிறவர்கள், தற்போது டீன், ஹெச்.ஓ.டி. ஆக இருப்பவர்கள் எல்லாம் பிசியாக இருப்பார்கள். அவர்களை விட்டு விடலாம். பிற பேராசிரியர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி படியுங்கள்.
3. ஓரிரு துணைத்துறை (sub division) செலக்ட் செய்து, அவர்கள் செய்யும் வேலை பற்றி ஆராய்ச்சி கட்டுரை கிடைத்தால் படிக்கவும்.
4. அப்ளிகேசனுடன், நீங்கள் இதற்கு முன் எதாவது கான்பரன்ஸ் பேபர் செய்திருந்தால் அது பற்றிய விவரங்களை கொடுக்கவும்.
5. அடுத்து, நீங்கள் எந்த துணைத்துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பது பற்றி ஒன்று அல்லது இரண்டு பத்தி (ஆங்கிலத்தில்) எழுதுங்கள். இறுதியில், ”வேறு துணைத்துறையில் இருந்தாலும் வேலை செய்ய தயார்” ( Although these are my main areas of interest, I am ready to work in other areas too if the opportunity arises....) என்பதையும் எழுதுங்கள்.
6. தனிப்பட்ட விவரங்களை தவிர்க்கவும் (hobbies, married/single etc).

Good luck.

Sunday, October 31, 2010

இளநிலை கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

பெங்களூரிவில் இருக்கும் IISC (ஐ.ஐ.எஸ்.சி) என்ற இந்திய அறிவியல் கழகத்தில் கோடைப் பயிற்சி வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இதன் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டு உள்ளது.


சுருக்கமாக,

1. பல இஞ்சினியரிங், மற்றும் அறிவியல் துறைகளில் வாய்ப்பு உண்டு
2. 31. டிசம்பர்.2010 தான் கடைசி நாள். காலம் தாமதிக்காமல், விரைவில் விண்ணப்பம் செய்யவும்.

Monday, January 18, 2010

பொறியியல் துறை மாணவர்கள் கவனத்திற்கு!

ஒவ்வொரு வருடமும் சென்னை ஐ.ஐ.டி. இல், வேறு கல்லூரிகளில் படிக்க்ம் மாணவர்கள் summer internship செய்ய ஒரு அறிவிப்பு வரும். 2010க்கு , இப்போது அதற்கான விளம்பரம் வந்துள்ளது. நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ கல்லூரியில் படித்தால் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். சுருக்கமாக,

1. எல்லா பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளிலும் இருக்கிறது.
2. அப்ளிகேசன் கொடுக்க கடைசி நாள் பிப்ரவரி 17.
3. internship ஆனது மே மாதம் 17 முதல் ஜுலை 16 வரை. இதில் கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடியும். (எ.கா. உங்கள் கல்லூரி கொஞ்சம் லேட்டாக முடிந்தால், நீங்களும் தாமதமாக வர அனுமதிப்பார்கள்)
4. மாதம் 6,500/- ரூபாய் வரை, ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
5. இது மூன்றாம் ஆண்டு படிக்கும் B.Tech. மாணவர்களுக்கு மற்றும் முதல் ஆண்டு படிக்கும் எம்.எஸ்.சி. , எம்.பி.ஏ, எம். ஏ மாணவர்களுக்கு. ஆனால், இரண்டாம் ஆண்டு படிக்கும் B.Tech. மாணவர்களும் சும்மா application போட்டு வைக்கலாம் என்பது என் கருத்து.
6. Application fee கிடையாது.

வெறும் அப்ளிகேசன் போட்டால் ஓரளவுதான் வாய்ப்பு. உங்கள் வாய்ப்பை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை:

1. உங்கள் துறையில் ஐ.ஐ.டி. யில் யார் யார் வேலை செய்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை இணைய தளத்தில் சென்று பார்க்கவும்.
2. பெரும்பாலும் ரிடையர் ஆகப் போகிறவர்கள், தற்போது டீன், ஹெச்.ஓ.டி. ஆக இருப்பவர்கள் எல்லாம் பிசியாக இருப்பார்கள். அவர்களை விட்டு விடலாம். பிற பேராசிரியர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி படியுங்கள்.
3. ஓரிரு துணைத்துறை (sub division) செலக்ட் செய்து, அவர்கள் செய்யும் வேலை பற்றி ஆராய்ச்சி கட்டுரை கிடைத்தால் படிக்கவும்.
4. அப்ளிகேசனுடன், நீங்கள் இதற்கு முன் எதாவது கான்பரன்ஸ் பேபர் செய்திருந்தால் அது பற்றிய விவரங்களை கொடுக்கவும்.
5. அடுத்து, நீங்கள் எந்த துணைத்துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பது பற்றி ஒன்று அல்லது இரண்டு பத்தி (ஆங்கிலத்தில்) எழுதுங்கள். இறுதியில், ”வேறு துணைத்துறையில் இருந்தாலும் வேலை செய்ய தயார்” ( Although these are my main areas of interest, I am ready to work in other areas too if the opportunity arises....) என்பதையும் எழுதுங்கள்.
6. தனிப்பட்ட விவரங்களை தவிர்க்கவும் (hobbies, married/single etc).

Good luck.

Wednesday, May 6, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை - பகுதி 5

தமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலையை சார்ந்த என்ஜினியரிங் கல்லூரிகளில், நல்ல கல்லூரிகள் என்று கருதும் சில கல்லூரிகள் லிஸ்டு இங்கே கொடுக்கப் பட்டு இருக்கிறது.

டிஸ்கி: எனக்கு தெரிந்த வரை சரியான விவரம் கொடுத்திருக்கிறேன். நல்ல கல்லூரிகள் ஏதாவது விட்டுப் போய் இருந்தாலோ, அல்லது ஓட்டை கல்லூரி லிஸ்டில் இருந்தாலோ அது தெரிந்து செய்தது அல்ல. மற்றபடி நீங்கள் ஒரு கல்லூரியில் சேரும் முன்னர் எல்லா விவரங்களையும் சரிபார்ப்பது உங்கள் பொறுப்பு!

கீழே இருக்கும் லிஸ்டில் , cut-off என்று இருப்பது எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு பொதுப் பிரிவில்
போன வருடம் (2008 ஆகஸ்டு மாதம்) அந்த கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் எடுத்த மதிப்பு ஆகும். இந்த மார்க் அல்லது அதிகம் எடுத்தவர்கள் மட்டுமே அந்த துறையில் அந்தப் பிரிவில் சேர்ந்திருக்கிறார்கள். மற்ற துறைகளுக்கும் மற்ற பிரிவிற்கும் பொதுவாக மதிப்பெண் குறைவாக இருக்கும். எல்லா விவரங்களும் தெரிய வேண்டும் என்றால் அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்று இந்த ஒரு எண்ணை வைத்து ஓரளவு மதிப்பிட முடியும். (அட்டவணை ரொம்ப கீழே இருக்கிறது, அதை மேலே கொண்டுவர வழி தெரியவில்லை).


























































Name Cut Off Comments
"College of Engineering, Chennai " 200 ---
"Madras Institute of Technology, Chennai " 199.5 ---
"P.S.G. College of Technology, Coimbatore " 199.5 ---
"Coimbatore Institute of Technology, Coimbatore " 198.25 ---
"Govt. College of Technology, Coimbatore " 198.25 ---
"Sri Sivasubramaniya Nadar College of Engineering, Chennai " 198 ---
"Thiagarajar College of Engineering, Madurai " 198 ---
"Sri Venkateswara College of Engineering, Sriperumbudur " 197.25 திருப்பாச்சூரில் இருக்கும் Sri Venkateswara College of Engineering and Technology என்பது வேறு கல்லூரி
"Kumaraguru College of Technology, Coimbatore " 197 ---
"St. Joseph's College of Engineering, Chennai " 197 காஞ்சிபுரத்தில் இருக்கும் St Josephs College of Engineering என்பது வேறு கல்லூரி
"A.C. College of Technology, Chennai" 196.75 இந்தக் கல்லூரியில் E.C.E. கிடையாது. கெமிக்கல் துறை cut-off 196.75 ஆகும்.
.
"Kongu Engineering College, Erode " 196.25 ---
"Velammal Engineering College, Chennai " 196.25 Velammal Institute of Technology என்பது வேறு கல்லூரி
"Govt. Engineering College, Salem " 196.25 ---
"A.C. College of Engineering and Technology, Karaikudi " 195.75 ---
"B.S. Abdur Rahman Crescent Engineering College, Chennai " 195.75 ---
"Panimalar Engineering College, Chennai " 195.5 ---
"Sri Sairam Engineering College, Chennai" 195.25 "Sri Sairam Institute of Technology, SriRam Engineering College ஆகியவை வேறு கல்லூரிகள்"
"Govt. Engineering College, Tirunelveli " 195.25 ---
"Meenakshi Sundararajan Engineering College, Chennai " 195.25 ---
"MEPCO Schlenk Engineering College, Sivakasi " 195 ---
"R.M.K. Engineering College, Thiruvallur " 195 "RMK College of Engineering and Technology, Thiruvallur என்பது வேறு கல்லூரி”
"Easwari Engineering College, Chennai " 195 ---
"Bannari Amman Institute of Technology, Sathyamangalam " 194.75 ---
"Jeppiaar Engineering College, Chennai " 194.5 ---
"Institute of Road and Transport Technology, Erode " 193.5 ---
"R.M.D. Engineering College, Thiruvallur " 193 ---
"Sona College of Technology, Salem " 193 ---
"Vel Tech Engineering College, Chennai " 192.25 Vel High Tech என்பது வேறு கல்லூரி
"Rajalakshmi Engineering College, Kanchipuram Dt " 191.75 ---
"Govt. College of Engineering, Bargur " 191.5 ---
"Misrimal Navajee Munoth Jain Engineering College, Chennai " 190.5 ---
"V.L.B. Janaki Ammal College of Engineering and Technology, Coimbatore " 190 ---
"Jerusalem College of Engineering, Chennai " 189.25 ---
"Arunai Engineering College, Tiruvannamalai " 188.25 ---
"Saranathan College of Engineering, Trichy " 188 ---
"S.R.R. Engineering College, Chennai" 187.5 S.K.R. Engineering College என்பது வேறு கல்லூரி
"K.C.G. College of Technology, Chennai " 186.75 ---
"Maamallan Institute of Technology, Kanchipuram Dt " 186.5 ---
"Sri Muthukumaran Institute of Technology, Chennai " 186.25 ---
"Jaya Engineering College, Thiruninravur " 186.25 ---
"A.V.C. College of Engineering, Mayiladuthurai " 186 ---
"S.A. Engineering College, Chennai " 185 ---
"Anand Institute of Higher Technology, Chennai " 184.75 ---
"Anjalai Ammal Mahalingam Engineering College, Thiruvarur Dt " 184.5 ---
"Meenakshi College of Engineering, Chennai " 184.25 ---
"Tagore Engineering College, Chennai " 183.75 ---
"Madha Engineering College, Chennai " 182.25 ---
"Prathyusha Institute of Technology and Management, Thiruvallur " 180.75 ---
"Sree Sastha Institute of Engineering and Technology, Chennai " 180.5 ---
"Pallavan College of Engineering, Kanchipuram Dt " 180.44 Kanchi Pallavan college of Engineering, Kanchipuram என்பது வேறு கல்லூரி
"Kamban Engineering College, Tiruvannamalai " 180 ---
"S.K.P. Engineering College, Tiruvannamalai " 179 ---
"Magna College of Engineering, Chennai " 174.5 ---
"Shree Motilal Kanhaiyalal Fomra Institute of Technology, Chennai " 173.95 ---
"Kalsar College of Engineering, Kanchipuram Dt. " 169.5 ---
"Ponnaiyah Ramajayam College of Engineering and Technology, Thanjavur " 168.25 ---


பல கல்லூரிகளுக்கு ஒரே மாதிரி பெயர் இருக்கும். ஒன்று நல்ல கல்லூரியாகவும் மற்றவை ஓட்டையாகவும் இருக்கலாம். சரியாகப் பார்த்து விசாரித்து சேரவும்!

அதிக கட்-ஆஃப் இருந்தால் அது நல்ல கல்லூரி என்று சொல்லலாம். 195க்கு மேலே இருக்கும் கல்லூரிகள் மிக நல்ல கல்லூரிகள் என்றும், 190லிருந்து 195 வரை இருப்பவை நல்ல கல்லூரிகள் என்றும், 185 லிருந்து 190 வரை இருப்பவை ஓரளவு பரவாயில்லை என்றும், 180 முதல் 185 வரை இருப்பவை ஓ.கே. , குறைந்த பட்ச தகுதி இருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த கட் ஆஃப் மார்க் 180க்கு மேல் இருந்தால், இதில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் காசு கொடுத்து சேருவது (உங்களுக்கு வசதி இருந்தால்) ஓகே.

ஒருவேளை உங்கள் மதிப்பெண் இதைவிட குறைவாக இருந்தால் என்ன செய்வது? உங்கள் பிரிவைப் பொறுத்து இந்த கல்லூரிகளிலேயே ஈ.சீ.ஈ. என்ற எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன் கிடைக்கலாம். அப்படியும் கிடக்காவிட்டால், இதைவிட குறைவாக இருக்கும் கல்லூரிகளில் அதிகம் காசை கொட்டி எலக்ட்ரானிக்ஸ் படிப்பதற்கு, இந்த கல்லூரிகளிலேயே வேறு பிரிவு எடுப்பது நல்லது வேறு பிரிவுகளுக்கு கட்-ஆஃப் குறைவாக இருக்கும்.

இது தவிர சில விவரங்கள்: 1. நீங்கள் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்தால் ‘பொது விவரம்' அதிகமாகத் தெரியும். இதை ஆங்கிலத்தில் exposure என்று சொல்லலாம். அதனால் முடிந்த வரை சென்னையில் இருக்கும் கல்லூரியில் படியுங்கள்.

2. விடுதியில் தங்கி படிப்பது நல்லது. இதில் செலவு அதிகம், மற்றும் வீட்டில் இருக்கும் கவனிப்பு இருக்காது. ஆனால், பிறருடன் அட்ஜெஸ்ட் செய்து இருப்பது, ஒரு ஆளை எடை போடுவது எப்படி ஆகியவற்றை உங்களுக்கும் (உங்களுடம் இருக்கும் மற்ற மாணவ மாணவியருக்கும்) அனுபவம் மூலம் கற்பிக்கும் வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். விடுதியில் தங்கி இருக்கும் அனுபவம் எதிர்காலத்தில் உங்களுக்கு உதவும். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கல்லூரியில் சேரவேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவார்கள். உங்களுக்கும் ‘தெரியாத இடத்திற்கு போக வேண்டுமா' என்ற கவலை இருக்கும். ஆனாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், மொத்தத்தில் ஹாஸ்டல் நல்லது

3. அரசுக் கல்லூரிகளில் கட்டணம் குறைவு. அதனால் சேலம், திருநெல்வேலி, பருகூர் ஆகிய கல்லூரிகளில் எல்லா மாணவர்களும் சேர விரும்புவார்கள். அதனால் கட்-ஆஃப் அதிகமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அந்த கல்லூரிகளில் சொல்லித்தருவதை விட சென்னையில் பல தனியார் கல்லூரிகளில் பரவாயில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு மிக நல்ல மதிப்பெண் இருந்தால் சென்னை அண்ணா பல்கலையில் கிடைக்கும். இல்லாவிட்டால் கோவை அரசு கல்லூரியில் கிடைக்கும். மதிப்பெண் கொஞ்சம் குறைந்தால், சேலம் அல்லது மற்ற அரசு கல்லூரிக்கு செல்வதை விட, (வசதி இருந்தால்) சென்னையில் இருக்கும் நல்ல தனியார் கல்லூரியில் சேருவது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.

Saturday, April 18, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 4

இதற்கு முன் தமிழகத்தில் இருக்கும் என்ஜினியரிங் கல்லூரிகள் பற்றிய மேலோட்டமான விவரங்களைப் பார்த்தோம். அண்ணா பல்கலை, அரசு கல்லூரி, தனியார் கல்லூரி, தனியார் பல்கலை என்று இவற்றின் வகைகளையும் பார்த்தோம். எல்லா கல்லூரிகளும் ஒரு போல இல்லை. சிலவற்றை 'நல்லவை' என்று சிலவற்றை ‘உதவாதது' என்றும் மாணவர்கள்/பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பை வைத்து இது தீர்மானிக்கப் படுகிறது என்பதையும், சில தனியார் கல்லூரிகள் இதில் தில்லுமுல்லு செய்வது பற்றியும் பார்த்தோம்.

இனி, ஒரு கல்லூரியை எப்படி நல்ல கல்லூரியா இல்லையா என்று கணிப்பது? இது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒரு கல்லூரியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் நல்ல வேலை கிடைத்தால் அதை நல்ல கல்லூரி என்று சொல்லலாம். இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். எல்லா மாணவர்களுக்கும் நல்ல கல்வி தந்தால், வேலை கிடைப்பது சுலபம். ஏனென்றால், தனியார் நிறுவனங்கள் விஷயம் தெரிந்த மாணவர்களை எடுக்கவே எப்போதும் விரும்பும். படிப்பு மட்டும் போதாது என்றாலும், நன்றாகப் பேசும் திறமை, பர்சனாலிடி என்று பல விஷயங்களுடன் படிப்பும் நிச்சயம் தேவை.

கல்லூரி மேனேஜ்மெண்ட் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாணவர்கள் நன்றாக கற்க ஏற்பாடு செய்தால் போதும். அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை. நல்ல ஆசிரியர்கள் வேண்டும் என்றால் ஓரளவாவது நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும். அதில் கஞ்சத்தனம் செய்து காசு பார்க்கும் கல்லூரிகளில் தான் கல்வி கற்பிப்பது மோசமாக இருக்கும்.

சில தனியார் கல்லூரிகளில், நாலாவது வருடம் கல்லூரி முடித்த மாண்வர்களையே ஆசிரியர்களாக எடுத்து மாதத்திற்கு 5,000 அல்லது 4,000 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். ஏனென்றால் நல்ல ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய்க்கும் மேல் கொடுக்க வேண்டி இருக்கும். ஒரு ஆசிரியருக்கு குறைந்த பட்சம் 8,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இந்த 'நாலாம் ஆண்டு முடித்த' ஆசிரியர்களிடம் 8000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கையெழுத்து வாங்கிக்கொண்டு கொஞ்சம் பணம் மட்டுமே கொடுப்பார்கள்.

இந்த மாணவர்களாவது நன்றாக சொல்லித்தருவார்களா என்றால் இல்லை. ஏனென்றால், ஓரளவு விஷயம் தெரிந்த மாணவன் வெளியில் தனியார் நிறுவனத்தில் 10,000 ரூபாய்க்காவது வேலையில் சேர்ந்திருப்பான். வெளியில் வேலை கிடைக்காத ‘மக்கு' மாணவன் தான் அடுத்த வருட மாணவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் சொல்லித்தர வருவான். அதிலும் கூட தனக்கு தெரிந்ததையாவது முழு ஈடுபாட்டுடன் சொல்லித்தர மாட்டான். ஏனென்றால், வெளியில் வேறு வேலை கிடைக்குமா என்ற தேடிக்கொண்டே, பாதி மனதையும் நேரத்தையும் அதில் செலவழித்துக் கொண்டே பாடம் நடத்துவதால், அதில் குறை அதிகமாக இருக்கும்.

(குறிப்பு: நான் இந்த மாணவ/ஆசிரியர்களைக் குறைகூற விரும்பவில்லை. அவர்கள் கஷ்டம் எனக்கு முழுதாகத் தெரியாது. ஒரு கல்லூரியில் சேரும்போது நாம் எதையெல்லாம் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட மட்டும் விரும்புகிறேன்).

அதைப் போலவே சில கல்லூரிகள் இன்னொரு விஷயத்திலும் கஞ்சத்தனத்தைக் காட்டும். அது என்ன என்று கேட்டால் ‘செய்முறை கூடங்கள்' என்ற லேப் (Lab). நல்ல செய்முறை கூடங்களுக்கு பல விலை உயர்ந்த கருவிகளை வாங்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக லொட்டு லொசுக்கு கருவிகளை வைத்து , அல்லது அது கூட வைக்காமல், சில கல்லூரிகள் நடக்கின்றன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை விட கொஞ்சம் குறைவாகத்தான் விவரம் தெரிந்திருக்கும். ஒரு மெசினைப் பார்த்து ஆபரேட் செய்வதற்கும், புத்தகத்தில் மட்டும் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சரி இது வரை எல்லாம் ‘தியரடிக்கலாக' பார்த்து இருக்கிறோம். ‘இவை எல்லாம் நல்ல கல்லூரிகள்' என்று ஏதாவது லிஸ்ட் உண்டா?

உண்டு. இந்த லிஸ்டை நீங்களும் தயாரிக்கலாம். கடந்த ஒரு சில வருடங்களில் எந்த கல்லூரிகளை மாணவர்கள் விரும்பி எடுத்திருக்கிறார்கள் என்பதை வைத்து ஓரளவு சொல்ல முடியும். அடுத்து இந்த கல்லூரிகள் எல்லாம் சரியாக நடக்கின்றனவா, இங்கு செய்முறை/ஆய்வுக் கூடங்கள் நல்ல படி இருக்கின்றனவா என்று நடுநடுவில் அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்தும், வேறு சில பல்கலைக் கழகத்தில் இருந்தும் சோதனைக்கு செல்வார்கள். அவர்களில் யாரையாவது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்து இருந்தால் அதன் மூலமும் இந்தத் தனியார் கல்லூரி பற்றி அறிந்து கொள்ள முடியும். அப்படி இப்படி சேர்த்த நல்ல கல்லூரிகளின் லிஸ்ட், அடுத்த பதிவில்.

Wednesday, March 25, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 3

சில தனியார் கல்லூரிகள், ‘100% ப்ளெஸ்மெண்ட்' இல்லாதபோதே, இருப்பது போல காண்பிக்கும். இதற்கு ஒரு குறுக்கு வழி உண்டு. இப்படி காண்பித்தால், புதிதாக வரும் மாணவர்கள்/பெற்றோர்கள் ‘சரி, இங்கே படித்தால், படித்து முடித்ததும் வேலை கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையில், டொனேசன் கட்டி சேருவார்கள்.

கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் (அதாவது கல்லூரி வழியாக வேலை கிடைப்பது) என்பது அண்ணா பல்கலைக் கழகம் நடத்துவது. அண்ணா பல்கலையின் கீழே இருக்கும் மாணவர்களை பல கம்பெனிகள் வந்து தேர்வு மற்றும் இண்டெர்வியூ வைத்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும். வேலைக்கு எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகம் மூலம் லெட்டர் கொடுக்கும். இதனால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், ‘இந்தக் கல்லூரியில், இந்தப் பிரிவில் இத்தனை மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது' என்ற புள்ளி விவரம் கிடைக்கும்.

இதில் எப்படி ஏமாற்ற முடியும்?

ஒரு எடுத்துக் காட்டாக “தில்லாலங்கடி காலேஜ்' என்று ஒரு காலேஜ் நான் நடத்துவதாக வைத்துக் கொள்வோம். எனது கல்லூரி மாணவர்களுக்கு ப்ளேஸ்மெண்ட் காண்பிக்க, என் நண்பரையோ அல்லது உறவினரையோ வைத்து “டுபாக்கூர் கம்பெனி' என்ற பெயரில் ஒரு கம்பெனியை ரெஜிஸ்டர் செய்து விடுவேன். அண்ணா பல்கலைக் கழகத்தில் சில ஆயிரங்கள் கட்டி விட்டு, அந்தக் கம்பெனி முதலாளியாக நண்பர் வந்து, என் கல்லூரி மாணவர்கள் பலருக்கு வேலை கொடுத்துவிட்டு போய் விடுவார். லெட்டரில் “மே மாதம் 15ம் தேதி வந்து சேர்ந்து விடுங்கள், உங்கள் சம்பளம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்” என்று இருக்கும். மாணவர்களும் ‘வேலை கிடைத்து விட்டது' என்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

என்னைப் பொறுத்த வரை ” எங்கள் கல்லூரியில் எல்லா மாணவர்களுக்கும் வேலை கிடைத்து விட்டது, 100% ப்ளேஸ்மெண்ட். எங்கள் கல்லூரி மிகச் சிறந்த கல்லூரி” என்று வெளியில் சொல்லி விடுவேன்.

ஆனால் மாணவர்களுக்கு மே மாதம், இன்னோரு லெட்டர் வரும். ‘கம்பெனி நிலை சரியில்லாததால், அக்டோபர் 1ம் தேதி வந்து சேருங்கள்' என்று சொல்லும். அக்டோபரில் “அடுத்த ஜனவரி சேருங்கள்' என்று இன்னொரு லெட்டர் வரும். நேரில் போய் விசாரித்தால், ‘இப்போது வசதி இல்லை, வேண்டுமானால் சம்பளம் இல்லாமல் 3 மாதம் ட்ரெய்னிங் இருங்கள் பார்க்கலாம்' என்று சொல்வார்கள். மாணவர்களே வெறுத்துப் போய் வெளியே வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வார்கள். மறுபடி இந்த டுபாக்கூர் கம்பெனி அண்ணா பல்கலைக்கு போய், அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு இண்டெர்வியூ வைக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுப்பது போல, ஒவ்வொரு கேம்பஸ் ப்ளேஸ்மெண்டிலும் போய் ”நிறைவேற்ற மாட்டோம்” என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டே லெட்டர் கொடுக்கும்.

மாணவர்கள் கல்லூரி விட்டு வெளிவந்த பிறகு ”இந்த கம்பெனி இப்படி அலைக்கழிக்கிறது” என்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு போய் கம்ப்ளெய்ண்ட் கொடுப்பதற்கு பதிலாக வெறுத்துப் போய் விட்டு விடுவார்கள். அதிகம் பேர் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால், விவரம் மீறிப் போனால், இந்த டுபார்க்கூர் கம்பெனியை கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் வராமல் தடுக்கலாம். ஆனால், அதே ஆள் இன்னொரு கம்பெனி பெயரில் இதே வேலையை செய்வதை அவ்வளவு சுலபமாகத் தடுக்க முடியாது.

சரி, இது மோசமான கல்லூரிக்கு அறிகுறி. எதை வைத்து ஒரு கல்லூரியை ‘இது நல்ல கல்லூரி' என்று சொல்வது?

Monday, March 23, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 2

தமிழக எஞ்சினியரிங் கல்லூரிகள் பற்றிய சில விவரங்களையும், மதிப்பீடுகளையும் பார்க்கலாம்.

டிஸ்கி: இந்த விவரங்கள் ‘காத்து வாக்கில்' வந்த செய்திகளை வைத்து எழுதுவது. குறிப்பாக சில விவரங்களை சொன்னவர்கள், அவர்கள் பெயர்கள் வெளி வருவதை விரும்பவில்லை. “அவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் சொல்லுகிறார்கள், அவர்களுக்கு விவரம் நன்றாகத் தெரியும்” என்ற நம்பிக்கையில் நான் இங்கு எழுதுகிறேன்.

1. அரசு கல்லூரிகள் அனைத்தும் ஒரே லெவலில் இருப்பதில்லை. எ.கா. கோயம்புத்தூரில் இருக்கும் அரசு கல்லூரி, பருகூரில் இருக்கும் அரசு கல்லூரியை விட பல மடங்கு சிறந்தது. இது பற்றி மேலும் விவரங்களைப் பின்னர் பார்க்கலாம்.

2. சில தனியார் கல்லூரிகள் சில அரசு கல்லூரிகளை விட பரவாயில்லை.

3. தனியார் கல்லூரியில் ஒன்றான ‘சி.ஐ.டி' என்ற கோயம்புத்தூர் இன்ஸ்டிடுட் ஆஃப் டெக்னாலஜி' தனது எல்லா சீட்டுக்களையும் அரசுக்கே தந்து விடுகிறது. இதில் மேனேஜ்மெண்ட் கோட்டா என்பது கிடையாது. (இவ்விவரம் சரியா என்று நிச்சயமாகத் தெரியவில்லை).

4. சென்னையில் இருக்கும் ‘எஸ்.எஸ்.என்' என்ற ‘சிவசுப்ரமணியம் நாடார் கல்லூரி'யில் டொனேசன் வாங்குவதில்லை. தனியார் மேனேஜ்மெண்ட் வழியில் மாணவர்களை ‘எக்சாம்' வைத்து எடுக்கிறார்கள். பணம் கொடுத்து சீட் வாங்க முடியாது. நன்றாக மார்க் வாங்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள்.

5. 'ஈ.சீ.ஈ' என்ற எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவைத்தான் மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால், டொனேசனுக்கும் அதற்குதான் அதிகம். 3 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை நல்ல பெயர் வாங்கிய தனியார் கல்லூரிகளில் கேட்கிறார்கள்.

6. தனியார் கல்லூரி/ ‘பல்கலை'யில், மார்க் வரும் முன்னரே நீங்கள் கொஞ்சம் ‘அட்வான்ஸ்' கொடுத்தால், சீட் புக் செய்து கொள்ளலாம். மார்க் வந்த பின், கவுன்சலிங் வரும் முன்னும் புக் செய்து கொள்ளலாம். ரேட் கொஞ்சம் அதிகமாகும். கவுன்சிலிங் நட்க்கும் பொழுது புக் செய்தால் ரேட் ரொம்ப அதிகமாகும். சீட்டே இல்லாமலும் போகலாம்.

7. கல்லூரியின் மேனேஜ்மெண்ட் விருப்பத்தைப் பொறுத்து டொனேசன் மாறுபடும். கல்லூரி நடத்துபவர்கள் உங்கள் சாதி/மதமாக இருந்தால் டொனேசனை கொஞ்சம் பேசிக் குறைக்கலாம். குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியில், அவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு குறைக்க வாய்ப்பு உண்டு.

8. ஒரு தனியார் கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேனேஜ்மெண்ட் வழியில் செல்ல நீங்கள் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது கவுன்சிலிங்கிற்கு முன்னால் நடக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.. உங்கள் மதிப்பெண்களை வைத்து, கவுன்சிலிங்கில் அதே கல்லூரி, அதே பிரிவை நீங்கள் அரசு வழியில் தேர்ந்தெடுத்தால், பல கல்லூரிகளில் உங்கள் அட்வான்சை திருப்பி கொடுத்து விடுவார்கள். (திருப்பி கொடுக்க மாட்டார்கள், கல்லூரி கட்டணத்தில் கழித்துக் கொள்வார்கள்.) இதை முதலிலேயே பேசி வைத்துவிட வேண்டும்.



‘நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்ந்தெடுத்த கல்லூரி நல்ல காலேஜாகத்தான் இருக்கும்' என்றும் நமக்கு தோன்றும். இதற்கு முந்திய வருடத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு பிரிவிலும் எந்த அளவு மார்க் வாங்கியிருந்தால் சீட் கிடைத்தது என்ற விவரம் அண்ணா பல்கலைக் கழக வெப்சைட்டில் இருக்கிறது. இதை வைத்து எது நல்ல கல்லூரி என்பதை ஓரளவு கணிக்கலாம்.

எடுத்துக் காட்டாக, போன வருடம், CEG காலேஜில், 'ஈ.சீ.ஈ.' எடுக்க பொதுப் பிரிவில் 200க்கு 200 எடுத்தவர்களுக்கு மட்டும் கிடைத்தது, முஸ்லிம் கோட்டாவில் 199.25க்கு மேலும், கிருஸ்துவர் கோட்டாவில் 199.5க்கு மேலேயும், பி.சி. கோட்டாவில் 199.75க்கு மேலும், ஓ.பி.சி.யில் 199.25க்கு மேலேயும், எஸ்.சி.யில் 198க்கு மேலும், எஸ்.டி.பிரிவில் 195.25க்கு மேலும் எடுத்திருக்க வேண்டும். நீங்கள் முஸ்லிமாக இருந்து உங்கள் மதிப்பெண் 199.25க்கு மேலே இருந்தால், பொதுப் பிரிவிலோ அல்லது முஸ்லிம் பிரிவிலோ சீட் கிடைக்கும். இதைவிட மதிப்பெண் குறைவாக இருந்தால், வேறு கல்லூரியோ அல்லது சிவில், மெக்கானிகல் போல வேறு பிரிவோ தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.

இதை வைத்து, இந்த வருடத்திலும் கட்-ஆஃப் மார்க் எவ்வளவு இருக்கும் என்பதை ‘ஓரளவு தோராயமாக' கணிக்கலாம். நீங்கள் 190 மார்க் எடுத்தால், இந்த காலேஜில் ஈ.சீ.ஈ. கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடலாம். இது போல வேறு கல்லூரிகளிலும், வேறு பிரிவுகளிலும் போன வருட கட் ஆஃப் பார்த்தால் (1) உங்கள் மார்க்கிற்கு என்ன கிடைக்கும் என்பது சுமாராகத் தெரியும் (2) போன வருடம் மாணவர்கள் எந்த கல்லூரி/ எந்தப் பிரிவை விரும்பி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

ஏதாவது ஒரு கல்லூரியில், ஈ.சீ.ஈ. க்கு கட் ஆஃப் மார்க் 150 அல்லது 160 என்று இருந்தால், “பொதுவாக மாணவர்கள்/பெற்றோர்களுக்கு அந்தக் கல்லூரி பற்றி உயர்ந்த எண்ணம் இலலை” என்று புரிந்து கொள்ளலாம். அது போல ஈ.சீ. ஈ. க்கு கட் ஆஃப் மார்க் 195 என்று இருந்தால், பலர் இந்த கல்லூரி பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு கல்லூரி/பிரிவை தேர்ந்தெடுக்கும் பொழுது பெரும்பாலானவர்களின் கவலை “இதை முடித்ததும் நல்ல வேலை கிடைக்குமா?” என்பதே. நாலு வருடம் கழித்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, இருந்தாலும் இது இயற்கையாக நம் மனதில் தோன்றும் கேள்வி.

”இதற்கு முன் இந்தக் கல்லூரி இந்தப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைத்தால், நமக்கும் நாம் படிப்பை முடிக்கும்போது வேலை கிடைக்கும்” என்ற நம்பிக்கை வரும். ஒரு கல்லூரியில் ஒரு பிரிவில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் வேலை கிடைத்தது என்பதை ‘100% ப்ளேஸ்மெண்ட்' என்று சொல்வார்கள். இதில் சில கல்லூரிகள் தப்புக்கணக்கு காட்டுகின்றன. விவரங்கள் அடுத்த பதிவில்.