Tuesday, January 20, 2009

பொறியியல் துறை மாணவர்கள் கவனத்திற்கு

பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு. சென்னை ஐ.ஐ.டி. இல், summer internship (கோடைக்கால பகுதி நேர வேலை அல்லது ஆராய்ச்சி?) செய்ய வாய்ப்புகள் உள்ளன. இப்போது அதற்கான விளம்பரம் வந்துள்ளது. விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். சுருக்கமாக,

1. எல்லா பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளிலும் இருக்கிறது.
2. அப்ளிகேசன் கொடுக்க கடைசி நாள் பிப்ரவரி 18.
3. internship ஆனது மே மாதம் 16 முதல் ஜுலை 15 வரை. இதில் கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடியும். (எ.கா. உங்கள் கல்லூரி கொஞ்சம் லேட்டாக முடிந்தால், நீங்களும் தாமதமாக வர அனுமதிப்பார்கள்)
4. மாதம் 6,500/- ரூபாய் வரை, ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
5. இது மூன்றாம் ஆண்டு படிக்கும் B.Tech. மாணவர்களுக்கு மற்றும் முதல் ஆண்டு படிக்கும் எம்.எஸ்.சி. மாணவர்களுக்கு. ஆனால், இரண்டாம் ஆண்டு படிக்கும் B.Tech. மாணவர்களும் சும்மா application போட்டு வைக்கலாம் என்பது என் கருத்து.
6. Application fee கிடையாது.

இது நீங்கள் மேல்படிப்பிற்கு அமெரிக்கா செல்ல விரும்பினால் உதவும்.